Suganthini Ratnam / 2016 மே 26 , மு.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட களுதாவளைக் கிராமத்தைச் சேர்ந்த சீனித்தம்பி மோகன் (வயது 46) புதன்கிழமை (25) இரவு அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தடிகள் மற்றும் இரும்புக் கம்பிகளால் தாக்குதலுக்கு உள்ளாகிய இவர், களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, இவரது மனைவியான இராஜேஸ்வரி (வயது 44) என்பவர் அடி காயங்களுக்கு உள்ளான நிலையில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் இரண்டு பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேலும், நான்கு பேரைத் தேடி வருவதாகவும் பொலிஸார் கூறினர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


7 hours ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
21 Mar 2026