2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

கொரோனா சிகிச்சைக்கு எதிர்ப்பு; மட்டு. சட்டத்தரணிகள் போராட்டம்

Editorial   / 2020 மார்ச் 11 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, கனகராசா சரவணன்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை, கொரோனா சிகிச்சைப் பிரிவாக மாற்றுவதற்கு எதிர்ப்புத் தொவித்து, மட்டக்களப்பு மாவட்டச் சட்டத்தரணிகள் சங்கத்தினர், இன்று (11) பணி பகிஸ்கரிப்பையும் கவனயீர்ப்புப் போராட்டத்தையும் முன்னெடுத்துள்ளனர்.

நீதிமன்ற நடவடிக்கைகளை பகிஸ்கரித்த சட்டத்தரணிகள், நீதிமன்றுக்கு முன்பாக, “கொரோனா வைரஸ் மட்டக்களப்புக்கு வேண்டாம்”, “கொரோனாவுக்கு கிழக்குதான் இலக்கா?”, “மட்டக்களப்பை சுடுகாடாக்காதே” போன்ற சுலோகங்கள் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கும் செயற்பாடு, மட்டக்களப்பு மாவட்டத்தை முற்றுமுழுதாகப் பாதிப்புக்குள்ளாக்குமென, மட்டக்களப்பு மாவட்டச் சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி பே.பிரேம்நாத் இதன்போது தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .