2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

கொழும்பை நோக்கி போராட்டம் நகரும்

பேரின்பராஜா சபேஷ்   / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

தண்ணீர்த் தொழிற்சாலையை மூடுவது தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை அரசாங்கமோ, ஜனாதிபதியோ, பிரதமரே, சம்மந்தப்பட்டவர்களோ மேற்கொள்ளாவிட்டால், இரண்டொரு வாரங்களில் தமது போராட்டம், கொழும்பை நோக்கி நகருமென, மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தெரிவித்தார்.

புல்லுமலையில் அமைக்கப்படும் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர்த் தொழிற்சாலையைத் தடைசெய்யுமாறு வலியுறுத்தி, பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. எனினும், இதுவரை எவ்விதமான சாதகமான பதிலும் கிடைக்கவில்லை.

இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களைத் தெழிவுபடுத்தும் ஊடகச் சந்திப்பு, செங்கலடியில் நேற்று (18) மாலை நடைபெற்ற போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--