2021 மே 15, சனிக்கிழமை

காத்தான்குடியில் இருவருக்கு டெங்கு

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 25 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடி நகரசபைப் பிரிவில் இம்மாதம்; 02 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி, வைத்தியர்; யு.எல்.நஸிர்தீன் தெரிவித்தார்.

இம்மாதம் முதலாம் திகதி முதல் 23ஆம் திகதிவரையில் காத்தான்குடி நகரசபைப் பிரிவிலுள்ள 06 பேர் டெங்குக் காய்ச்சல் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 02 டெங்கு நோயாளார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறிருக்க, புதிய காத்தான்குடி தக்வா நகர் பிரதேசத்திலுள்ள வீடுகள், சுற்றுப்புறச்சூழலில் நாளை வெள்ளிக்கிழமை பொதுச்சுகாதாரப் பரிசோதர்கள்  சோதனை மேற்கொள்ளவுள்ளனர். இதன்போது, டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு காரணமாக இருப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

மழைக்காலம் ஆரம்பமாகியுள்ளதால்; டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கான வாய்ப்புள்ளது. எனவே, வீடுகளையும்  சுற்றுப்புறச்சூழலையும் சுத்தமாக வைத்திருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .