2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் சி.ரவீந்திரநாத்துக்கு நினைவு அஞ்சலி

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 15 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நல்லதம்பி நித்தியானந்தன்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர்; சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் காணாமல் ஆக்கப்பட்டு இன்றையதினத்துடன் (15) 10 வருடங்கள் பூர்த்தியாவதையிட்டு அப்பல்கலைக்கழகத்தில் நினைவு அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது.

மேற்படி பல்கலைக்கழகத்தினுடைய விவசாயப் பீடாத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது, அவரது  உருவப்படத்துக்கு மலர் மாலை இடப்பட்டு, 03 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இவர் காணாமல் ஆக்கப்பட்டு 10 வருடங்கள்  கடந்துள்ள நிலையிலும், நீதியான விசாரணை மேற்கொள்ளப்படவில்லை என மேற்படி பல்கலைக்கழக விவசாயப் பீடாதிபதி கலாநிதி பி.சிவராசா  தெரிவித்தார்.

சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் உபவேந்தராக கடமையாற்றிய காலப்பகுதியில் 15.12.2006 அன்று கொழும்பில் நடைபெற்ற சர்வதேச ஆய்வு மாநாட்டில் கலந்துகொண்ட பின்னர், அக்காலத்தில் அதி உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த தலைநகர் கொழும்பில் காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .