2021 மார்ச் 03, புதன்கிழமை

கிழக்குப் பல்கலைக்கழக மாணவன் தாக்கப்பட்டமையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2016 மே 27 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில் முகாமைத்துவபீடத்தின் இரண்டாம் வருட மாணவன் ஒருவன்
பெரும்பான்மையின மாணவர்கள் சிலரினால் தாக்கப்பட்டமையைக் கண்டித்தும் தாக்கியவர்களை கைதுசெய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரியும் இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குறித்த மாணவன் தனது பேஸ்புக்கில் முள்ளிவாய்க்கால் நினைவுதின புகைப்படம் ஒன்றைத் தரவேற்றம் செய்தமையைக் கண்டித்து குறித்த மாணவன் பெரும்பான்மையின மாணவர்கள் சிலரினால்; தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

மட்டக்களப்பு தமிழ் மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, 'ஒழுக்காற்று நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்' எனும் தலைப்பிலான மகஜரை மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரனிடம் கையளித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .