2025 ஒக்டோபர் 23, வியாழக்கிழமை

பிறந்து 13 நாட்களான சிசு உயிரிழப்பு

Freelancer   / 2025 ஒக்டோபர் 23 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேணியா வியாதியினால் பிறந்து 13 நாள்களேயான ஆண் சிசு ஒன்று யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளது.

 இவ்வாறு உயிரிழந்த சிசு அல்வாய் வடக்கு, அல்வாயைச் சேர்ந்த பரந்தாமன் நிரூசா தம்பதிகளின் சிசுவாகும்.

கடந்த 9 ஆம் திகதி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிசு பிறந்த நிலையில், பிற்பகல் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சிசு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (21) உயிரிழந்துள்ளது.

இம்  மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார்  விசாரணைகளை மேற்கொண்டார். சாட்சிகளை பருத்தித்துறைப் பொலிஸார் நெறிப்படுத்தினார்.

கேணியா வியாதி காரணமாக  உயிரழப்பு ஏற்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X