2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

சமுர்த்தி சிப்தொர கல்விப் புலமைப்பரிசில் வழங்கி வைப்பு

Editorial   / 2020 பெப்ரவரி 28 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடியில் மாணவர்களுக்கான சமுர்த்தி சிப்தொர கல்விப் புலமைப்பரிசில் கொடுப்பனவு, இன்று (28) வெள்ளிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.

காத்தான்குடி மீராபாலிகா தேசிய பாடசாலை மண்டபத்தில், இந்தக் கொடுப்பனவுப் பத்திரம் வழங்கும் வைபவம் நடைபெற்றது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதயஸ்ரீதரின் வழிகாட்டலில், காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி தலைமமையக முகாமையாளர் திருமதி பத்மா ஜெயராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில், காத்தான்குடி மீராபாலிகா தேசிய பாடசாலையின் அதிபரும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவருமான எம்.சி.எம்.ஏ.சத்தார், காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி சமூக பாதுகாப்பு உத்தியோகத்தர் திருமதி அஸீமா சகாப்தீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில், சமுர்த்தி பயனாளிகள் குடும்பத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்கும் 213 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் கொடுப்பனவுப்பத்திரம் வழங்கப்பட்டன.

மாதமொன்றுக்கு 1,500 ரூபாய் வீதம் இரண்டு வருடங்களுக்கு இக் கொடுப்பனவை இம் மாணவர்கள் பெறவுள்ளனர்.

சமுர்த்தி நன்மை பெறும் குடும்பங்களில் உயர்தரம் கல்வி கற்கும் மாணவர்களின் கல்விச் செயற்பாட்டை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு கல்விக்கு உதவும் நடவடிக்கையாக சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தால் இந்த சமுர்த்தி சிப்தொர கல்விப் புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .