Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜூன் 11 , பி.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ.ஹுஸைன் எம்.எஸ்.எம்.நூர்தீன் கே.எல்.ரி.யுதாஜித்
இந்த அரசாங்கத்துக்கு எதிராக முஸ்லிம்கள் வீதிகளில் இறங்கி ஜனநாயக ரீதியாகப் போராடுவதுடன் மாத்திரமல்லாது சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு முன்வர வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் அறைகூவல் விடுத்துள்ளார்.
கண்டும் காணாதது போன்று இந்த அரசாங்கம் செயற்படுவதால் இந்த நாட்டு முஸ்லிம்களின் பிரச்சினைகளை ஐக்கிய நாடுகள் சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழு ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் வெளிநாட்டு உயர்ஸ்தானிகர்களுக்கும் கொண்டு செல்ல தம்மாலான பங்களிப்புக்களைச் செய்வதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது 'திட்டமிட்ட முறையில் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் அழிக்கப்படுவதை நல்லாட்சி அரசாங்கம் கண்டும் காணாதது போன்று இருந்து வருகின்றது.
'இவற்றுக்குப் பின்னாலுள்ள சதி தொடர்பில்இ நல்லாட்சி அரசாங்கம் வெளியில் கொண்டுவராமல் ஏன் மறைக்கின்றது?
'இந்த சதிக்குப் பின்னால் இருப்பவர்களை நல்லாட்சி அரசாங்கம் உடனடியாகக் கண்டறிய வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது.
'நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்குப் பக்கபலமாக நின்று மிகப்பெரும் பங்காற்றிய முஸ்லிம் சமூகத்தினுடைய பொருளாதாரம் திட்டமிட்ட முறையில் அழிக்கப்படும்போது கண்டும் காணாதது போன்று இருப்பதை நாங்கள் கண்டிக்கின்றோம்.
'எவ்வித பாராபட்சமுமில்லாமல் உடனடியாக மூவினங்களையும் உள்ளடக்கியதான தனியான விசேட பொலிஸ் விசாரணை ஆணைக்குழுவை உருவாக்கிஇ முஸ்லிம்களைக் குறிவைத்து மேற்கொள்ளப்படும் நாசகாரச் சம்பவங்களுக்குப் பின்னால் இருக்கின்ற சதித்திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்து அதற்குரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
'நாட்டின் இறைமையையும் ஒற்றுமையையும் சீர்குலைத்தார்கள் என்ற அடிப்படையில் இச்சதித் திட்டங்களுக்குப் பின்னால் இருக்கின்றவர்களுக்குத் தண்டனை வழங்குவதன் ஊடாக அநீதிகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய தேவைப்பாடு நல்லாட்சி அரசாங்கத்துக்கு இருக்கின்றது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
2 hours ago