Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
கே.எல்.ரி.யுதாஜித் / 2017 மே 30 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.எல்.ரி.யுதாஜித்
'போரும் போருக்குப் பின்னரான காலப்பகுதியில்; தொட்டுணராப் பண்பாட்டு மரபுரிமைகள் எதிர்கொள்ளும் சவால்களும் முக்கியத்துவமும்' எனும் தொனிப்பொருளிலான சர்வதேச ஆராய்ச்சி மாநாடு, கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல்; கற்கைகள் நிறுவகத்தில் நடைபெறவுள்ளது என மேற்படி நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சி.ஜெயசங்கர் தெரிவித்தார்.
எதிர்வரும் ஜுன் 15ஆம் திகதி மாலை 6 மணிக்கு ஆரம்பமாகும் இம்மாநாட்டின் அமர்வுகள் 16ஆம், 17ஆம் திகதிகளில் நடைபெறும் என்பதுடன், விருப்பத் தெரிவுக்குரிய கலை, பண்பாட்டுக் களப் பயணம் 18ஆம் திகதி மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.
இந்த மாநாட்டுக்கான சமர்ப்பிப்புக்கள் தற்போது பெறப்படுகின்றன. மேற்படி தொனிப்பொருளிலான ஆய்வு ஆக்கங்கள், ஆற்றுகைகள், காட்சிப்படுத்தல்கள் ஆகியன சமர்ப்பிப்புக்களில் உள்ளடக்கப்படலாம் எனவும் அவர் கூறினார்.
போர்க் காலத்திலும் போருக்குப் பின்னரான காலத்திலும் மனித வாழ்வை வடிவமைக்கின்ற பண்பாட்டு மரபுரிமைகள் சவால்களை எதிர்கொண்டு வருகின்றன.
போர் அனர்த்த அழுத்தங்களிலிருந்து விடுவிப்பு, இடப்;பெயர்வு, மீள்குடியேற்றம், சமுதாயமயப்படுத்தல், வாழ்க்கையை மீளத் தொடங்குவதற்கு ஆற்றுப்படுத்தல், ஆற்றல்களைக் கொண்டாடுதல், உள்ளூர் அறிவு, திறன் என்பவை வாழ்க்கையை மீளவும் உருவாக்குவதற்கான மூலாதாரங்களாக விளங்குதல் எனப் பேசாப் பொருளாகக் காணப்படுகின்றன.
எனவே உணர்ந்தும் உணராமலும், அறிந்தும் அறியாமலும் வாழ்வியலை வடிவமைத்துக் கொண்டிருக்கின்ற, பேசாப் பொருளாக அதிகம் காணப்படுகின்ற விடயங்களைக் கவனத்திற்கொள்ளும் வகையில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago