Gavitha / 2015 நவம்பர் 22 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா
தமிழ்நாட்டு கலைஞர்களினால், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள தமிழ் கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் வேல்ஸ் சினிமா பட்டறையின் ஏற்பாட்டில் பாலுமகேந்திரா திறைப்பட விழா, சனிக்கிழமை (21) மாலை மட்டக்களப்பில் இடம்பெற்றது.
செங்கலடி வேல்ஸ் நடனக்கல்லூரியும் வேல்ஸ் சினிமா பட்டறையும் இணைந்து, இந்த நிகழ்வை மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடத்தியது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், தமிழ்நாட்டின் பிரபல இயக்குநர் சுரேஸ் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், இந்தியாவின் உதவி இயக்குனர்கள்,தொழில் அதிபர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின்போது, 50க்கும் மேற்பட்ட இலங்கை திரைப்படத்துறை கலைஞர்கள,; வேல்ஸ் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பாடகர், சிறந்த பாடகி, சிறந்த இயக்குனர், சிறந்த தயாரிப்பாளர், சிறந்த குறுந்திரைப்படம், வாழ்நாள் சாதனையாளர் உட்பட பல விருதுகள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
இலங்கையின் திரைப்படத்துறை வரலாற்றில் முதன்முறையாக தமிழ் நாட்டு கலைஞர்களினால் இலங்கை தமிழ் கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும்.






 
30 Oct 2025
30 Oct 2025
30 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 Oct 2025
30 Oct 2025
30 Oct 2025