2021 மே 06, வியாழக்கிழமை

தொடரும் ஊழியர்களின் ஆர்ப்பாட்டம்

Niroshini   / 2015 ஒக்டோபர் 05 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்
 
வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்களுக்கு கடந்த நான்கு மாத சம்பளமும் முப்பது வீத நிலுவையும் வழங்கப்படவில்லை என்று ஆலை ஊழியர்கள் தொடர்ச்சியாக நடத்தி வரும் ஆர்ப்பாட்டம் இன்று 18ஆவது நாளாகவும் இடம்பெறுகின்றது.

தங்களது சம்பள நிலுவையை வழங்கக் கோரி கடந்த 18ஆம் திகதி தொடக்கம் கடதாசி ஆலைக்கு முன்பாக அமைதியான முறையில் நடத்தி வந்த இந்த ஆர்ப்பாட்டம் தொடர்ந்தும் 18ஆவது நாளாகவும்  இடம்பெற்று வருவதுடன் எதிர்காலத்தில் சம்பளப் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் எதிர்வரும் தினங்களில் வீதியில் இறங்கி சம்பளம் வழங்கும் வரை போராடுவோம் என்று ஆலை ஊழியர்கள் தெரிவித்தனர்.

தங்களது சம்பளப் பிரச்சினை தொடர்பாக நாங்கள் கடந்த 02ஆம் திகதி மாலை கொழும்பில் உள்ள தலைமைக் காரியாலயத்தில் இருந்து தொலைநகல் ஒன்று வந்துள்ளது. அதில் எங்களது சம்பளம் இவ் வாரம் வழங்கப்படும் என்றும் நாங்கள் நடத்தி வரும் போராட்டத்தினை கை விடுமாறும் அதில் கோரப்பட்டு ஆலையின் பொது முகாமையாளர் ஒப்பமிட்டு அனுப்பப்பட்டுள்ளது.

இக்கடிதத்தை ஊழியர்கள் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை. எங்களது பிரச்சினை தொடர்பாக அமைச்சர் ரிஷாட் பதியுதீனோ அல்லது அமைச்சில் உள்ள உயர் அதிகாரிகளோ எழுத்து மூலமோ அல்லது நேரடியாகவோ கூறினால் நாங்கள் எங்களது போராட்டத்தை கைவிடுவோம் என்றும் எங்களது தலைமைக் காரியாலயத்தில் இருந்து வரும் கடிதங்களை நாங்கள் நம்பத் தயாரில்லை என்றும் ஊழியர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .