Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 13 , மு.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் நிலவும் ஆளணி மற்றும் பௌதீகவளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி எதிர்வரும் 20ஆம் திகதி நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளதாக காத்தான்குடிப் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் அறிவித்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததை அறிந்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக், சம்மேளனப் பிரதிநிதிகளை அதன் காரியாலயத்தில் திங்கட்கிழமை (12) இரவு சந்தித்துக் கலந்துரையாடினார். இச்சந்திப்பின்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அச்சம்மேளனம் அறிவித்தது.
இது தொடர்பில் மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் தெரிவித்தபோது,'காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் நிலவும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு ஆர்ப்பாட்டத்தின் மூலம் தீர்வு காண முடியாது.
இது சம்பந்தமாக சம்மேளனம் என்னுடன் பேசி இருக்க வேண்டும். அதை விடுத்து, ஆர்ப்பாட்டத்தை நடத்தத் திட்டமிட்டிருந்தமை கவலைக்குரிய விடயமாகும்.
எனவே, ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டு, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் என்று வலியுறுத்தியுள்ளேன்.
இப்பிரச்சினை தொடர்பில் எதிர்வரும் 27ஆம் திகதிக்கு முன்னர் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் ஆகியோருடன் கலந்துரையாடிப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். இதன்போது தீர்வு கிடைக்காவிடின், நானே முன்னின்று ஆர்ப்பாட்டத்தை நடத்துவேன்' என்றார்.
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025