Editorial / 2018 மார்ச் 20 , பி.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன்
உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளும் நிகழ்வுகள், வட, கிழக்கில் இன்று (20) நடைபெற்றன.
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் இருந்து உள்ளூராட்சிமன்றங்களுக்கு தெரிவுசெய்யப்பட்டவர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு, மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வியாழேந்திரன், ஞா.சிறிநேசன், கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர்கள் எனப் பலர் இதில் கலந்துகொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தெரிவுசெய்யப்பட்ட 79 உறுப்பினர்களும் அம்பாறை மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 27 உறுப்பினர்களுமாக 106 உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

8 minute ago
17 minute ago
22 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
17 minute ago
22 minute ago
1 hours ago