Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜூலை 24 , மு.ப. 08:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
முரண்பாடுகளில்லாத நல்லிணக்கத்துடன் வாழக்கூடிய சமூகத்தை உருவாக்குவது அவசியமாகும். அரசியலுக்காக முட்டி மோதி அடிபடுகின்ற சமூகமாக இல்லாமல் விட்டுக்கொடுத்து புரிந்துணர்வுடன் வாழக்கூடிய சமூகமாகவே இருக்க வேண்டுமென தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள விளையாட்டுக்கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நடவடிக்கை, பிரதேச செயலக மண்டபத்தில் சனிக்கிழமை (23) மாலை நடைபெற்றது. இங்கு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'ஒழுக்கம், கட்டுப்பாடு, ஆளுமை என்பவற்றை இளைஞர்கள் வளர்க்க வேண்டும். எல்லோரையும் இணைத்துச் செயற்பட வேண்டும்' என்றார்.
'எமது கிராமப்புறங்களிலேயே திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்கள் உள்ளனர். அவர்களது திறமைகளை வெளிக்கொணர பொருத்தமான முறைகளில் எமது பிரதேசங்களில் விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்ய வேண்டும்
அண்மையில் ஜனாதிபதி மட்டக்களப்புக்கு வருகை தந்திருந்தபோது, அவருடன் வருகை தந்திருந்த விளையாட்டுத்துறை அமைச்சரிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க படுவான்கரை பிரதேசத்தில் மூன்று விளையாட்டு மைதானங்களை புனரமைத்து அபிவிருத்தி செய்ய ஏற்றுக்கொண்டதோடு மறுநாளே தனது அமைச்சின் பொறியியலாளரை மகிழடித்தீவு, நாவற்காடு, இலுப்பட்டிச்சேனை போன்ற இடங்களில் உள்ள விளையாட்டு மைதானங்களுக்கு அனுப்பி ஆரம்கட்ட மதிப்பீடுகளை செய்தார்.
இதன் பிரகாரம் இம்மூன்று மைதானங்களும் விரைவில் அபிவிருத்தி செய்யப்பட உள்ளது' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
2 hours ago
6 hours ago