2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

'நாமே கற்றுக் கொடுத்தோம்'

Niroshini   / 2015 ஒக்டோபர் 05 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் மௌலானா

நாட்டுக்கு தேசிய அரசாங்கம் தொடர்பில் கிழக்கு மாகாண ஆட்சியாளர்களாகிய நாமே கற்றுக் கொடுத்தோம் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

'இன்றைய இளைஞர்களே நாளைய தலைவர்கள்' என்ற தொனிப்பொருளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு,ஏறாவூர் பிரதேச இளைஞர் கழகங்களுடனான இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

இளைஞர்களை சமூகத்தின் முன்மாதிரியான தலைவர்களாக மாற்ற வேண்டும் என்பதே எமது இலக்காகும். திசைமாறும் இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டும். அனைத்து இளைஞர்களும் நற்பிரஜைகளாக மாற்றப்பட வேண்டும்.

இன்று கிழக்கு மாகாணத்தை முழு உலகுக்கும் எடுத்துக்காட்டாக மாற்றியிருக்கின்றோம். எமது நாட்டு மத்திய அரசாங்கமானது தேசிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைத்த நாமே அதற்கான முன்மாதிரியை வகுத்துக் கற்றுக் கொடுத்தோம்.

இம்மாகாணத்தில் இருக்கும் அனைத்து இளைஞர்களும் ஒத்துழைப்பு வழங்கி உதவுவீர்கள் என்றால் இந்த மாகாணத்தை போதையற்ற, புகைத்தலற்ற, உலகுக்கே எடுத்துக்காட்டான சிறந்ததொரு மாகாணமாக மாற்றியமைத்து காட்டுவேன்.

அதற்காக என்னுடன் மாகாண அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் பூரண ஒத்துழைப்பு தருவதற்கு காத்திருக்கிறார்கள் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .