2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

நுளம்பு வலைக்குள் முதியவரின் சடலம் மீட்பு

Princiya Dixci   / 2016 மார்ச் 09 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஆறுமுகத்தான் குடியிருப்புக் கிராமத்தில் நுளம்பு வலைக்குள் உறங்கிய நிலையில் இருந்த வயோதிபரின் சடலம், நேற்று செவ்வாய்க்கிழமை (08) மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆறுமுகத்தான் குடியிருப்புப் பிள்ளையார் கோயில் வீதியைச் சேர்ந்த 62 வயதான சிற்றம்பலம் சிதம்பரப்பிள்ளை என்பரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது. 

உயிரிழந்தவரது பிள்ளைகள், வெவ்வேறு இடங்களில் வசிக்கின்ற நிலையில் இவர், தொடர்ந்து தான் வாழ்ந்த வீட்டில் தனியாகவே வசித்து வந்துள்ளார்.

கடந்த 03ஆம் திகதியிலிருந்து இவருடனான தொலைபேசித் தொடர்பு இல்லாமல் போனதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இதனால் தாங்கள் அவர் வசித்த வீட்டுக்கு வந்து தேடிப் பார்த்தபோது வீடு பூட்டப்பட்டிருந்ததாகத் தெரிவித்த உறவினர்கள், அவ்வேளையில் வீட்டின் உள்ளே இருந்து துர்நாற்றம் வீசியதனால் வீட்டுக் கூரையைப் பிரித்து உள்ளே இறங்கிப் பார்த்தபோது நுளம்பு வலைக்குள் படுத்துறங்கியவாறு அவர் சடலமாகக் காணப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் சகிதம் ஸ்தலத்துக்கு விரைந்த ஏறாவூர் பொலிஸார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர்.

மாரடைப்பினால் ஏற்பட்ட மரணம் என பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் தெரிவித்தார்.

சடலம், பிரேத பரிசோதனையின் பின்னர் நேற்று (08) பிற்பகல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .