2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

போசாக்கு தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டம்

Editorial   / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் போசாக்கு தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த இவ்வேலைத்திட்டத்தின்கீழ், காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் 4 கொத்தணிகளாகப் பிரிக்கப்பட்டு போசாக்கு தொடர்பாக விழிப்பூட்டும் செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இதில் நான்காவது கொத்தணிப்பிரிவுக்கான போசாக்கு விழிப்பூட்டும் செயற்திட்டம் நேற்று (10),  காத்தான்குடி 3ஆம் குறிச்சி, பலநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் உதய சிறீதர் தலைமையில் நடைபெற்ற இந்த செயற்திட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எம்.சிவராசா உட்பட கிராம உத்தியோகத்தர்கள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோயத்தர்கள் கலந்து கொண்டனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--