எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2017 ஜூலை 19 , பி.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி ஆற்றங்கரையில், முதல் தடவையாக பெண்களுக்கான உடற்பயிற்சி நடைபாதை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும் நகரத் திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளரும், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான யு.எல்.எம்.என்.முபீனின் வேண்டுகோளுக்கமைய, விளையாட்டுத்துறை பிரதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் 30 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில், இந்த உடற்பயிற்சி நடைபாதை அமையப்பெறுகின்றது.
குறித்த வேலைத்திட்டத்தின் ஆரம்பப் பணிகளை, நகரத் திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளர் யு.எல்.எம்.என்.முபீன், காத்தான்குடி பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர் எம்.நளீம் மற்றும் காத்தான்குடி பிரதேச செயலகத்தின் தொழிநுட்ப உத்தியோகத்தர் எஸ்.நிராஜ் ஆகியோர், நேற்றுப் (18) பார்வையிட்டனர்.
5 minute ago
16 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
16 minute ago
2 hours ago
2 hours ago