ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2017 ஜூன் 03 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமார் 15,000 ரூபாய் பெறுமதியான ஒரு வகைப் போதை மாத்திரைகளுடன் இளைஞர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மட்டக்களப்பு, கல்லடியில் வைத்து நேற்றிரவு (02) திடீர் சோதனையிலீடுபட்ட பொழுது, கல்முனையிலிருந்து வாழைச்சேனை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த மூன்று இளைஞர்கள் தம்வசம், ஒரு வகைப் போதை மாத்திரைகளை வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மாத்திரைகளைக் கைப்பற்றிய பொலிஸார் முறையே 22, 24 மற்றும் 26 வயதான அந்த இளைஞர்கள் மூவரையும், கைதுசெய்து விசாரித்து வருவதோடு, நீதிமன்றில் ஆஜர் படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் மூவரும், வாழைச்சேனை பிறைந்துரைச்சேனைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்திருப்பதாகவும் பொலிஸார் கூறினர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago