2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

பயிற்சிநெறி

Suganthini Ratnam   / 2016 ஜூலை 18 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்

சமாதானமும் சமூகப்பணிக்குமான அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிலைமாறு கால நீதி தொடர்பாக  பயிற்றுவிப்பாளர்களை பயிற்றுவிக்கும் வதிவிட பயிற்சிநெறி  சனி, ஞாயிறு ஆகிய தினங்களில்  மட்டக்களப்பு சர்வோதய பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.

இதில் அம்பாறை  மாவட்டத்தின் கல்முனை மற்றும்  அக்கரைப்பற்று ஆகிய பிரதேங்களை சேர்ந்த  மக்கள் அமைப்புகளின் 20 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

சமாதானமும் சமுகப்பணிக்குமான அமைப்பின் தேசிய இணைப்பாளர் ரீ.தயாபரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வளவாளர்களாக சடடத்தரணிகளான திருமதி மங்களேஸ்வரி சங்கர், திருமதி றஜிதா ஜானராஜா ஆகியோர்கள் உட்பட சமாதானமும் சமூகப்பணிக்குமான அமைப்பின் திட்ட முகாமையாளர்  எம்.எஸ்.ஜலீல், திட்ட இணைப்பாளர் எம்.எம்.சமீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .