Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 நவம்பர் 12 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.விஜயரெத்தினம்
“சரத் பொன்சேகாவை எப்பொழுது ஆதரித்ததோ அப்பொழுதே போர்க்குற்றம் தொடர்பாக பேசுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தகுதியை இழந்துவிட்டது” என, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தின் தெரிவித்தார்.
திகிலிவெட்டையில் நேற்று முன்தினம் (10) நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“2010ஆம் ஆண்டு, ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரித்து, தமிழ் மக்களிடம் எப்பொழுது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வாக்கு கேட்கத் தொடங்கிதே அன்றிலிருந்து போர்க்குற்றங்கள் தொடர்பாக பேசுவதற்கு தகுதியை அது இழந்து வந்துவிட்டது.
கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் நிதி நிர்வாக இருப்பும் பொருளாதார பாதிப்புகளையும் எதிர்நோக்கி வருகின்றார்கள். இவர்களுக்கான மாற்று நடவடிக்கை மேற்கொள்வதை விடுத்து தொடர்ந்தும் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு, ஐக்கிய தேசியக் கட்சி அரசுக்கு முட்டுக் கொடுப்பது இவர்களின் வாடிக்கையாக உள்ளது.
“இதனைமாற்றவேண்டும். அப்போதுதான், கிழக்கு மக்களுக்கு விடிவு காலம் கிடைக்கும்” எனத் தெரிவித்தார்.
17 minute ago
44 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
44 minute ago
1 hours ago
3 hours ago