2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

பொலிஸாருக்கும் படையினருக்கும் தமிழ் மொழி கற்கை

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2020 ஜனவரி 07 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில், சிங்களத்தை தாய் மொழியாகக் கொண்ட பொலிஸாருக்கும் படையினருக்கும் தமிழ் மொழி டிப்ளோமா பயிற்சி ஆரம்ப நிகழ்வு, கல்லடி பொலிஸ் பயிற்சி கல்லூரியின் பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி ஏ.டி. ரஹீம் தலைமையில், நேற்று (06) நடைபெற்றது.

இந்தத் தொடக்க நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.என். மெண்டிஸ் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

கல்லடியில் அமைந்துள்ள  பொலிஸ் பயிற்சிக் கல்லூரியால் நடத்தப்பட்டு வரும் இரண்டாம் மொழி தமிழ்க் கற்கை நெறியின் 2020ஆம் ஆண்டுக்கான 05 மாதகால டிப்ளோமா பயிற்சி நெறி இதுவென அதிகாரிகள் தெரிவித்தனர்.

இப்பயிற்சிநெறியில், நாடளாவிய ரீதியில் இருந்து விண்ணப்பித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், விசேட அதிரடிப்படையினர் இணைந்துகொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .