2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

புளத்சிங்கள மக்களுக்கு காத்தான்குடி வாழ் மக்கள் உதவிக்கரம்

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2017 ஜூன் 08 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள பிரதேசத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 400க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் சிங்களக் குடும்பங்களுக்கு, அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகள், செவ்வாய்க்கிழமை மாலை வழங்கி வைக்கப்பட்டன.

காத்தான்குடி பிரதேச செயலகம், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் காத்தான்குடி ஜம்இயத்துல் உலமா, பொலிஸ் நிலையம் என்பவற்றின் ஒத்துழைப்புடன், இதற்கான நிதி திரட்டப்பட்டு, காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.பீ வெதகெதர தலைமையில் சென்ற காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்களால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்நிவாரணப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X