2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

'164 பேர் தொடர்பில் தெரியப்படுத்த வேண்டும்'

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 11 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து பாதுகாப்புப் படையினரால் அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் 164 பேருக்கும் என்ன நடந்தது என்பது பற்றி அரசாங்கம் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என வாழைச்சேனை கறுவேப்பங்கேணி சிவில் பாதுகாப்புக்குழுத் தலைவியும் பெண்கள் நலச் செயற்பாட்டாளருமான பி.லக்ஸ்மி தெரிவித்தார்.

சர்வதேச மனித உரிமைகள் தினமான சனிக்கிழமை (10) மட்டக்களப்பில் நடைபெற்ற மனிதச் சங்கிலிப் போராட்டத்தின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது, '1990.09.05ஆம்; திகதி கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்புத் தேடி தஞ்சமடைந்த 164 தமிழர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி இன்னும் எமக்குத்; தெரியாமலுள்ளது.

பாதுகாப்புப் படையினரிடம் தஞ்சம் அடைந்த அவர்களை   பாதுகாப்புப் படையினரே  அழைத்துச் சென்றார்கள். அவர்கள் தொடர்பில் இதுவரையில் எந்தவிதத் தகவலும் இல்லை.

அவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா அல்லது இல்லையா என்பது பற்றி இந்த அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.
அவர்களுக்கு இறப்புச் சான்றிதழ்கள்; வழங்குவதோ அல்லது 25,000 ரூபாய் பணம் வழங்குவதோ முக்கியமல்ல. அவர்களுக்கு என்ன நடந்தது என்பதே முக்கியமாகும் என்பதுடன், அதையே நாம் கேட்கின்றோம்.
 
கடந்தகால கசப்பான சம்பவங்கள் இனிமேலும்; இந்நாட்டில் இடம்பெறக்கூடாது. மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்' என்றார்;.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .