2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

94 பேரின் உயிரை மின்சாரம் காவுகொண்டுள்ளது

Princiya Dixci   / 2016 மார்ச் 17 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா. கிருஸ்ணா

மின்சாரத் தாக்கம் காரணமாக கடந்த ஆண்டு 94 பேர் உயிரிழந்துள்ளதாக இலங்கைப் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் கூட்டுத்தாபனத் தொடர்பாடல் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் வி. விமலாதித்தன் தெரிவித்தார்.

இலங்கைப் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் மின்சார நுகர்வோரின் உரிமைகள் மற்றும் கடமைகள் தொடர்பில் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்குத் தெளிவுபடுத்தும் கருத்தரங்கு, இன்று வியாழக்கிழமை (17) நடைபெற்றது.

இங்கு கருத்துத் தெரிவித்த இலங்கைப் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் கூட்டுத்தாபனத் தொடர்பாடல் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் வி. விமலாதித்தன்,

'மின்சாரம் தொடர்பில் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். குறிப்பாக வீடுகளில் உள்ள குழந்தைகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் தொடர்பில் அக்கறையுடன் செயற்படவேண்டும்.

'மின்சாரம் பாவனையாளர்கள் பாவனையினைப் பாதுகாப்பான முறையில் இடறுஆழியினைப்பொருத்த வேண்டும். பாதுகாப்பற்ற முறையில் மின்சாரங்கள் பயன்படுத்தப்படுவதன் காரணமாக மின்சாரத் தாக்கத்தினால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

'2014ஆம் ஆண்டு இலங்கையில் 180 பேர் மின்சாரத் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளனர். எனினும், பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மேற்கொண்டுவரும் விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் மூலம் இவை குறைவடைந்து, கடந்த ஆண்டு 94 பேர் மின்சாரத் தாக்கதினால் உயிரிழந்துள்ளனர்.

'2020ஆண்டு இந்த இழப்பினை நிறுத்தும் வரைக்குமான செயற்றிட்டம், பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .