2021 மே 06, வியாழக்கிழமை

போலி நாணயத்தாள் வழங்கியவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஜூலை 26 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, புதிய காத்தான்குடிப் பிரதேசத்தில் சீட்டுக் கட்டுவதற்காக பணம் வழங்கியபோது, 1,000 ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாளொன்றையும் வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் பெண்ணொருவரைக் கைதுசெய்து, விசாரணையின் பின்னர் விடுவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தில் சீட்டுப் பிடிக்கும் பெண்ணொருவருக்கு சீட்டுக் கட்டுவதற்கான  8,000 ரூபாய் பணத்தை திங்கட்கிழமை (25) காலை சந்தேக நபர் வழங்கியுள்ளார். இதன்போது, 2,000 ரூபாய் பெறுமதியான 02 நாணயத்தாள்களையும் 1,000 ரூபாய் பெறுமதியான 03 நாணயத்தாள்களையும் 500 ரூபாய் பெறுமதியான 02 நாணயத்தாள்களையும் சீட்டுப்பிடிக்கும் பெண்ணிடம் சந்தேக நபர்; வழங்கியுள்ளார்.  

இப்பணத்தைப் பெற்றுக்கொண்ட சீட்டுப்பிடிக்கும் பெண்ணுக்கு இப்பணத்தில் 1,000 ரூபாய் பெறுமதியான நாணயத்தாளொன்று தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து, சீட்டுப்பிடிக்கும் பெண் அயலவர்களை அழைத்து வீதியில் நின்றவாறு போலி நாணயத்தாளைக் காட்டிக்கொண்டிருந்தார். இந்நிலையில் அவ்வீதி வழியாக வந்த பொலிஸார், பெண்கள் கூட்டமாக நிற்பதைக் கண்டு விசாரித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் பொலிஸாருக்குத் தெரியவரவே, போலி நாணயத்தாளை வழங்கிய பெண்ணைக் கைதுசெய்ததுடன்,  போலி நாணயத்தாளையும் கைப்பற்றினர்.

சந்தேக நபர் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், இது தொடர்பில் தொடர்ந்து விசாரணை செய்துவருவதாகவும் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .