2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

மட்டு. மாநகர மேயர் செயலகத்துக்கு அனுமதி

Editorial   / 2018 செப்டெம்பர் 06 , பி.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித், வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாநகர சபையில் மேயர் செயலகம் அமைப்பதற்கான அனுமதியை, மேயர் தி.சரவணபன் தலைமையில் நடைபெற்ற மட்டக்களப்பு மாநகர சபையின் 9ஆவது அமர்வான இன்றைய (06) அமர்வின் போது, அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பிரதி மேயர் க.சத்தியசீலன், மாநகர சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் வழங்கிய ஏகமனதான ஆமோதிப்பின் அடிப்படையில், மாநக மேயருக்கான செயலகம் அங்கிகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள மாநகர சபைகள் அனைத்திலும் இந்த மேயர் செயலகம் உருவாக்கப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய மாநகர்களுக்கே, இந்தச் செயலகம் அமைக்கப்படவில்லை என்ற முன்வைப்பு, மேயரால் கொண்டுவரப்பட்டது. அதனையடுத்து சபை உறுப்பினர்களின் ஏகமானதாக ஒப்புதலின் அடிப்படையில், இதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

இன்றைய அமர்வில், ஆசிய மன்றத்தின் ஊடாக அவர்களது பங்களிப்புடன் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள், நிலுவையாக உள்ள நிதிகளை அறவிடுதல், மாநகர வாகனங்களை வாடகைக்கு விடுதல் தொடர்பான அறவீடுகள், மாநகர அபிவிருத்திச் செயற்றிட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.

மாநகர மேயரால், நிலுவையாக உள்ள வரி அறிவீட்டு மாதத்துக்கான பிரகடனம், கடந்த 4ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, எதிர்வரும் ஒரு மாத காலத்துக்கு நடைமுறைப் -படுத்தப்படவுள்ளதுடன், ஒவ்வொரு வட்டாரத்துக்குமென 10 பேர் கொண்ட குழுக்கள் வீதம் தெரிவுசெய்யப்பட்டு, அவர்களுக்கான பணிகளும் பொறுப்பளிக்கப் -பட்டுள்மையும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--