2021 மே 08, சனிக்கிழமை

மட்டக்களப்பு வைத்தியசாலையில் 402 சிசு மரணங்கள்

Niroshini   / 2015 நவம்பர் 22 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடந்த 4 ஆண்டுகளில் 402 சிசு மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக வைத்தியசாலையின் மகப்பேற்று நிபுணரும் கிழக்கு பல்கலைக் கழக சிரேஸ்ட விரிவுரையாளருமான கே.ஈ. கருணாகரன் தெரிவித்தார்.

இதில்,201 சிசு மரணங்கள் பிரசவ அறைகளிலும் ஏனைய மரணங்கள் மகப்பேற்று விடுதிகளிலும் இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

2011ஆம் ஆண்டில் 46 சிசுக்களும் 2012இல் 54 சிசுக்களும் 2013இல் 60 சிசுக்களும் மற்றும் 2014இல் 41 சிசுக்களுமாக 201 சிசுக்கள் பிரசவ அறைகளில் மரணமடைந்துள்ளதோடு மகப்பேற்று விடுதிகளில் 201 சிசுக்கள மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X