Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 மார்ச் 19 , மு.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
சட்டவிரோதமாக மணல் அகழ்வுக்காகப் பயன்படுத்தப்பட்ட பெக்கோ இயந்திரமொன்றையும் 13 உழவு இயந்திரங்களையும்
ஆயித்தியமலைப் பொலிஸார், நேற்று வெள்ளிக்கிழமை (18) கைப்பற்றியதோடு, இந்த இயந்திரங்களின் 14 சாரதிகளைக் கைதுசெய்துள்ளனர்.
மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள புத்தம்புரிப் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடம்பெறுவது குறித்து பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் ஏறாவூர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கே.பி. கீர்த்திரத்தினவின் பணிப்புக்கமைவாக சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இந்த இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டன.
இச்சம்பவம் குறித்து ஆயித்தியமலை மற்றும் கரடியனாறு பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அகழப்பட்ட மண்ணையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், உழவு இயந்திரம் மற்றும் பெக்கோ இயந்திரத்தின் உரிமையாளர்களையும் சாரதிகளையும் விசாரணைக்குட்படுத்தி வருகின்றனர்.
2 hours ago
5 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
7 hours ago
7 hours ago