2021 ஜனவரி 27, புதன்கிழமை

மணல் கடத்தல்; ஒருவர் கைது

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2019 நவம்பர் 26 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமான முறையில்மணல் கடத்தலில் ஈடுபட்ட நபரொருவரை,  ஆரையம்பதியில்  வைத்து, விசேட அதிரடிப்படையினர், இன்று (26) கைது செய்துள்ளனரென, காத்தான்குடி பொலிஸ் நிலையப் பதில்பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இந்த மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட டிப்பர் வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அனுமதிப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தையும் மாற்றி, பாலமுனை  பிரதேசத்துக்கு மணலைக் கடத்திச் சென்றபோதே, இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான நபரும் டிப்பரும் காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .