Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 13 , மு.ப. 08:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
ஏறாவூர் பொலிஸ் பிரிவு, சித்தாண்டி 4 பிரிவில் கிராம அபிவிருத்திச் சங்க வீதியிலுள்ள வீட்டு வளவொன்றில் காணப்பட்ட 81 மில்லி மீற்றர் மோட்டார் குண்டொன்றை ஏறாவூர் பொலிஸார் திங்கட்கிழமை ;மீட்டு செயலிழக்கச் செய்துள்ளனர்.
வீட்டுரிமையாளர்கள் கொடுத்த தகவலின் பிரகாரம் திங்கட்;கிழமைஸ்தலத்திற்கு விரைந்த முறக்கொட்டான்சேனை படையினரும் ஏறாவூர் பொலிஸாரும் இந்த மோட்டார் குண்டை மீட்டுள்ளனர்.
வீடு மற்றும் வளவைத் துப்புரவு செய்து கொண்டிருந்த போது இந்தக் குண்டு தென்பட்டதும் உடனடியாக பாதுகாப்புத் தரப்பினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இது யுத்த காலத்தில் கைவிடப்பட்ட குண்டாக இருக்கலாம் என குண்டு செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
1 minute ago
8 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 minute ago
8 minute ago
1 hours ago
2 hours ago