Suganthini Ratnam / 2016 ஜூலை 19 , மு.ப. 08:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, காத்தான்குடி நகரில் திங்கட்கிழமை (18) காலை பாடசாலைக்குச் சென்ற மாணவி ஒருவர் வீடு திரும்பவில்லை என்று தம்மிடம் பெற்றோர்; முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடியைச் சேர்ந்த நஜிமுதீன் பாத்திமா தஸ்னிகா (வயது 16) என்ற மாணவி வழமை போன்று திங்கட்கிழமை பாடசாலைக்குச் சென்றுள்ளார். ஆயினும், பாடசாலை முடிந்து ஏனைய பிள்ளைகள் வீடு திரும்பியபோதும், தமது மகள் வீடு திரும்பவில்லை என்று பெற்றோர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த மாணவி திங்கட்கிழமை பாடசாலைக்குச் சமுகமளிக்கவில்லை பாடசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். குறித்த மாணவி பற்றிய தகவல் அறிந்தால், காத்தான்குடிப் பொலிஸாருக்கு உடனடியாக அறியத்தருமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .