2021 மே 06, வியாழக்கிழமை

'முஸ்லிம்கள் தரப்பிலிருந்து காணாமல் போனோரையும் விசாரிக்க வேண்டும்'

Niroshini   / 2015 நவம்பர் 15 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹூஸைன்

காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஐ.நா. வின் விசாரணைக் குழு முஸ்லிம்கள் தரப்பில் காணாமல் போனோரையும் விசாரிக்க வேண்டும் என கிழக்கிலங்கை சமூக அபிவிருத்தி மன்றமான தன்னார்வ நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஹ்மூதுலெப்பை மொஹமட் புஹாரி மொஹமட் தெரிவித்தார்.

காணாமல் போனவர்களின் உறவினர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களை ஐ.நா விசாரணைக் குழு கிழக்கு மாகாணத்துக்குச் சென்று விசாரித்து வருகின்றது.

அந்த வகையில் சனிக்கிழமை(14) மட்டக்களப்பு வந்த குழுவினரிடம் யுத்த காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களும் இல்லாமலாக்கப்பட்ட விடயங்களை எடுத்துக் கூறிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஓட்டமாவடிப் பிரதேசத்தில் காணாமல் போன 5 முஸ்லிம்கள் தொடர்பாக அவர்களது குடும்பங்களுடன் விவரங்களை முன் வைத்துள்ளோம்.

ஆனால், இப்படியொரு வாய்ப்புத் தங்களுக்குத் தர வேண்டும் என்பதைத் தாங்கள் ஐ.நா அலுவலகத்திடம் எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்ததன் பேரிலேயே அந்த சந்தர்ப்பம் தமக்குத் தரப்பட்டது என்றார்.

காணாமல் போன முஸ்லிம்கள்; தொடர்பான விவரங்களை மட்டக்களப்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தில் வைத்து அக்குழுவினர் சனிக்கிழமை பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .