Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 26 , மு.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா, வடிவேல் சக்திவேல், கனகராசா சரவணன்
'எமது மக்களின் தீர்வுக்காக சட்ட நிர்ணய சபை ஊடாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்த தீர்வை முன்வைப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் செயற்படுகின்றார் எனக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
இந்த அரசியல் தீர்வைப் பெறுவதற்காக நாம் அனைவரும் அவரைப் பலப்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார்.
கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை தேவராசாவின் 31ஆவது ஆண்டு நினைவுதினம், ஆலையடிவேம்புக் கலாசார மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (25) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது,'2016 இல் தீர்வு பெற்றுத்தருவதாக எமது தலைவர் இரா.சம்பந்தன் கூறிய கருத்து பொய்த்து விட்டதாக தற்போது சிலர் விமர்சிக்கின்றனர். கால நிர்ணயம் என்பது அனைத்துத் தலைவர்களாலும் முன்வைக்கப்படும் சாதாரண விடயமாகும். எமது தலைவரும் தனது உரையில் கால நிர்ணயத்தை முன்வைப்பது உண்டு. எனவே இதை எவரும் விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை' என்றார்.
'மேலும், நாட்டில் நீதியை நிலை நாட்டும் நீதி அமைச்சர் இந்த நாட்டில் நீதியை நிலை நாட்டுவதற்காக செயற்படுகின்றாரா என்ற கேள்வி அனைவரின் மத்தியில் தற்போது எழுந்துள்ளது. காரணம் அண்மையில் மட்டக்களப்புக்கு விஜயம் செய்த நீதி அமைச்சர், அண்மைக்காலமாக இன முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் பிக்கு ஒருவருக்கு நற்சான்றிதழ் வழங்கிச் சென்றுள்ளார்.
பெரும்பான்மையின மக்கள் மட்டக்களப்பில் வாழ்ந்துள்ளனர் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் ஒருபோதும் மறுக்கவில்லை, அவர்கள் குடியேற வேண்டும் என்பதையும் மறுக்கவில்லை. இதற்கு நாம்; ஆதரவு வழங்குவோம், இருந்தும், இதனைப் பயன்படுத்தி அதிகமான மக்களைத் திட்டமிட்டுக் குடியேற்றுவதை நாம்; அனுமதிக்க மாட்டோம்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago