Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2017 மே 29 , பி.ப. 02:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
கிழக்கு மாகாணசபை ஊடாக ஒவ்வொரு உள்ளூராட்சிமன்ற நிர்வாகப் பிரிவிலும் ஒவ்வொரு வீட்டுத்திட்டத்தை நிர்மாணிப்பதற்குரிய நிதி ஒதுக்கீட்டைப் பெறுவதற்கான வழிவகையைச் செய்து வருவதாக அம்மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், இன்று தெரிவித்தார்.
இது கைகூடினால், ஒவ்வொரு உள்ளூராட்சிமன்றப் பிரிவிலும் குறைந்தபட்சம் 50 வீடுகளையாவது நிர்மாணித்தால், இம்மகாணத்திலுள்ள 45 உள்ளூராட்சிமன்றப் பிரிவுகளிலும் மொத்தம் 2,250 வீடுகளை வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு நிர்மாணித்துக் கொடுக்க முடியும் எனவும் அவர் கூறினார்.
கடந்த யுத்தம், சுனாமி, வெள்ளம் ஆகியவற்றால் வீடுகளை இழந்த பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் இம்மாகாணத்தில் உள்ளதுடன், இவர்களுக்கு வீட்டு வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியுள்ளது.
இம்மாகாணத்தில் ஆகக்குறைந்தது 25,000 வீடுகளையாவது நிர்மாணிக்க வேண்டிய தேவை உள்ளது எனவும் அவர் கூறினார்.
'செமட்ட செவன' எனும் திட்டத்தின் கீழ், கிழக்கு மாகாணத்தில் 100 வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டு வருகின்றன எனவும் அவர் கூறினார்.
யுத்தத்துக்குப் பின்னரான மீள்குடியேற்றம் கூட, கிழக்கு மாகாணத்தில் முழுமையாகவும்; திருப்தியாகவும் இடம்பெறவில்லை.
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த அல்ல ஏனைய வகையில் பாதிப்புகளுக்கு உள்ளான மக்களில் பலர், இன்னமும் அதற்கான நிவாரணம் பெற முடியாத நிலையில் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
யுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களுக்கு மத்திய அரசாங்கம் மூலமாக ஒரு பாரிய ஒதுக்கீட்டுத் திட்டம் இன்னமும் அமுல்படுத்தப்படாதிருப்பதும் வருத்தமளிக்கின்றது எனவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago