2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

விபத்து; குழந்தை உட்பட நால்வர் படுகாயம்

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2020 ஜனவரி 20 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில், கல்லடி சிவானந்தா விளையாட்டு மைதானத்துக்கு முன்னால், நேற்று (19) மாலை இடம்பெற்ற பாரிய விபத்தில் இரு வயதுக் குழந்தை உட்பட நால்வர் படுகாயமடைந்து, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு நோக்கி வந்த காரொன்று, அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளொன்றுடன் கொழுவி, அதிகதூரம் இழுபட்டதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த கணவனும் மனைவியும் அவரது இருவயதுக் குழந்தையும் காரில் பயணித்த ஒருவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த இடத்தில் கடந்த வாரம் ஏறபட்ட விபத்தில் ஒருவர் பலியானமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .