2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

வாகன விபத்தில் இளைஞன் காயம்; சாரதி கைது

Niroshini   / 2015 செப்டெம்பர் 29 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு,கல்முனை பிரதான வீதியில் தாளங்குடா எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்னாள் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்து ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் எரிபொருள் நிரப்புவதற்காக எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு செல்ல முற்பட்டபோது,முச்சக்கர வண்டி தனது வேகக் கட்டுபாட்டையிழந்து மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.

இதில்,மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.மேலும்,இச்சம்பவத்துடன் தொடர்புடைய முச்சக்கர வண்டி சாரதியை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X