2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

விகாராதிபதியை மாற்றுமாறு கோரியுள்ளோம்: சிறிநேசன்

Gavitha   / 2016 டிசெம்பர் 22 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா.பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பில், இனங்களிடையே முறுகல்நிலைகள் இடம்பெறுவதற்கு காரணமாகவுள்ள மட்டக்களப்பு மங்கலராம விகாராதிபதியை, வெறொரு இடத்துக்கு மாற்றி, அதற்கு பதிலாக மற்றுமொருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, நீதியமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போதைய நிலைமை தொடர்பிலான கலந்துரையாடலொன்று, மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில், புத்தசாசன மற்றும் நீதித்துறை அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது.

இதன்போதே, இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

'அண்மைக்காலமாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் முறுகல் நிலையொன்று ஏற்பட்டிருந்தது. சிறியதொரு விடயம் பாரிய பிரச்சினையாக கிளம்பியது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், இந்த கலந்துரையாடல் காணப்பட்டது.

இனிவரும் காலப்பகுதியில் இவ்வாறான பிரச்சினைகளுக்கு இலகுவில் தீர்வு காணுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

பல்லியன மக்களது கலாசாரம் உள்ள நாட்டில், அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று, அமைச்சர் எம்மிடம் தெரிவித்தார்' என்று அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .