Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜூலை 10 , மு.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஆர்.ஜெயஸ்ரீராம்
இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த பாசிக்குடா சுற்றுலா விடுதித் திறப்பு விழா பிற்போடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு, கல்குடாப் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான தம்பிப்பிள்ளை பாக்கியராசா (வயது 51) என்பவர் கடந்த வியாழக்கிழமை இரவு கும்பல் ஒன்றைச் சேர்ந்தவர்களினால் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் பலியாகியுள்ளார். அத்துடன், இவரிடமிருந்து இரண்டரைப் பவுண் தங்கநகையையும் இனந்தெரியாதோர் பறிமுதல் செய்துகொண்டு தப்பிச்சென்றிருந்தனர்.
பாசிக்குடா கடலில் சுற்றுலாப் படகை செலுத்துபவரான இவரது வீட்டுக்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் ஹோட்டல் ஒன்றில் பணியாற்றும் இருவர் வாடகைக்கு குடியிருந்துள்ளனர். இவர்கள் மூவரும் சிகரெட் வாங்குவதற்கு கடைக்குச் சென்றுகொண்டிருந்தபோதே தாக்குதலுக்கு உள்ளானார்கள்.
இம்மூவரில் ஒருவர் தப்பியோடியதுடன், ஏனைய இருவரும் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் தம்பிப்பிள்ளை பாக்கியராசா என்பவர் உயிரிழந்துள்ளார்.
இத்தாக்குதலில் காயமடைந்த மற்றைய நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்ட 06 பேரை வாழைச்Nனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, அவர்களை எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறிருக்க, கடந்த வெள்ளிக்கிழமை இரவு மேலும் 02 பேர் பொலிஸாரடம் சரணடைந்துள்ளனர்.
இச்சந்தேக நபர்கள் அநுராதபுரம், றிதிகல, களுத்துறை, ரணகல, கினிகத்பொல, செவனகல உள்ளிட்ட இடங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago