Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 மே 19 , மு.ப. 08:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடிவேல் சக்திவேல்
களுவாஞ்சிகுடி பிரதான வீதியில், விஷ்னு ஆலயத்துக்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை (19) நண்பகல் இடம்பெற்ற விபத்தில், 4 பேர் படுகாயமடைந்து, களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்வாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தானர்.
கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும், மட்டக்களப்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில், மோட்டார் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்த ரகுநாதன் (வயது 27), கவிதா (வயது 27), மற்றும் இவர்களது இரண்டரை வயது மகள் ரசிக்கா ஆகியோர் படுகாயமடைந்துள்ளதுடன், முச்சக்கர வண்டியை செலுத்திச் சென்ற யதுசன் (வயது 19) என்பவரும் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.
இவ்விபத்துச் சம்பவம்; தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .