2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

வெள்ளைப்பாலம் புனரமைக்கும் பணி

Suganthini Ratnam   / 2016 மார்ச் 09 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு நகரை இணைக்கும் முக்கிய பாலமான வெள்ளைப் பாலத்தை புனரமைக்கும் பணி இன்று புதன்கிழமை ஆரம்பமாகியுள்ளது.

2012ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சேதமடைந்த இப்பாலம் புனரமைக்கப்பட்டபோதிலும், ஆபத்து நிறைந்ததாகவே இருந்துவந்தது. இந்நிலையிலேயே இப்பாலத்தை மீளவும் புனரமைக்கும் பணியை வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஆரம்பித்துள்ளது.

இப்புனரமைப்புப் பணிக்காக உலக வங்கி சுமார் 300 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் ரி.பத்மராஜா தெரிவித்தார்.

கட்டம் கட்டமாக இப்பாலம் புனரமைக்கப்படவுள்ளதுடன், முதற்கட்டமாக பாலத்தின் ஒருபகுதி புனரமைக்கும் பணியை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X