2021 மே 06, வியாழக்கிழமை

விவசாயிகளுக்கு பழ மரக் கன்றுகள் விநியோகம்

Niroshini   / 2015 நவம்பர் 19 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கிராமிய மட்ட காணி பயன்பாட்டு மாதிரி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு பழ மரக் கன்றுகள்  வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பத்தரைக் கட்டைக் கிராமத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.

காணி உபயோக கொள்கை திட்டமிடல் திணைக்களத்தின் நிதி அனுசரணையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதேச செயலாளர் எஸ். சுதாகர் மா, தோடை, பலா உள்ளிட்ட  பழ மரக் கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்கி வைத்தார்.

இதன்மூலம், 60 குடும்பங்களுக்கு தலா 15 பயன் தரும் பழ மரக் கன்றுகளும் மற்றும் நிலக்கடலை, சோழன் போன்ற சேனைப் பயிர் விதைகளும் வழங்கப்பட்டன.

இதில்,உதவி பிரதேச செயலாளர் எஸ். ராஜ்பாபு மற்றும் நிருவாக உத்தியோகத்தர் ஜெ. ஜெயந்திரன், காணி பண்பாட்டு திட்டமிடல் உத்தியோகத்தர் என். குமாரதாஸ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .