Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2016 மே 29 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா, பதுர்தீன் சியானா, எஸ்.சபேசன். த.தவக்குமார், வடிவேல் சக்திவேல்
அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவடங்களில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ள வௌ;வேறு விபத்துகளில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், 06 பேர் காயமடைந்துள்ளனர்.
அம்பாறை, பாலமுனைப் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் பாலமுனை நான்காம் பிரிவைச் சேர்ந்த ஏ.எல்.வஹாப்தீன் (வயது 48) என்பவர் பலியாகியுள்ளார்.
பாலமுனை மாவட்ட வைத்தியசாலைக்கு முன்பாக வீதியை கடக்க முற்பட்ட இவர் மீது அக்கரைப்பற்றுப் பிரதேசத்திலிருந்து கல்முனைப் பிரதேசம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த லொறி மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து லொறியின் சாரதியைக் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இவ்வாறிருக்க, திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள மூன்று விபத்துகளில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
அலஸ்தோட்டம் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளுடன் முச்சக்கரவண்டி மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற சாம்பல்தீவு எட்டாம் வட்டாரத்தைச் சேர்ந்த ஏ.கீர்த்திகா (வயது 33) என்பவர் காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, முச்சக்கரவண்டிச் சாரதியை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, திரியாய் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர், மாடு ஒன்றுடன் மோதியதில் அப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்களான எம்.புலேந்திரன் (வயது 41), எஸ்.கிருபாகரன் (வயது 33 வயது) ஆகியோர் காயமடைந்த நிலையில் குச்சவெளிப் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இப்பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளும் சைக்கிளும்; மோதியதில் சைக்கிளில்; சென்ற புல்மோட்டை முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த உமர்லெப்பை (வயது 54) காயமடைந்த நிலையில் புல்மோட்டை தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
மட்டக்களப்பு, காத்தான்குடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பிரதான வீதியால் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து மதகுடன்; மோதியதில் படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அம்பாறை, இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த எம்.சியான் (வயது 21) என்பவர் அப்பிரதேசத்திலிருந்து மூதூர் பிரதேசத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோதே விபத்துக்கு உள்ளானதாக பொலிஸார் கூறினர்.
இந்த விபத்துகள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Jul 2025
14 Jul 2025