2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பில் யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகி 10 பேர் பலி

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 01 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டு காட்டு யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகி 10 பேர் உயிரிழந்துள்ளதாக  ஜீவராசிகள் திணைக்கள  தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதத்தில் மட்டும் பெண் உட்பட 7 பேர் மரணமடைந்துள்ளதாகவும் ஏனையோர்; விவசாயிகள் என்றும் ஜீவராசிகள் திணைக்கள  தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வருடம் காட்டுயானைகளின் தாக்குதலுக்கு 12 பேர் மரணமடைந்ததாக ஜீவராசிகள் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, காட்டு யானைகள் மக்கள் நடமாட்டப் பகுதிகளுக்குள் நுழைவதை தடுக்கும் வகையில் கொக்கட்டிச்சோலை, வவுணதீவு, செங்கலடி, கிரான் ஆகிய பிரதேச செயலக பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் யானைகள் பாதுகாப்பு மின்சாரவேலி அமைக்கும் வேலைகள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .