Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 26 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஆர்.அனுருத்தன்)
"அரசியல் அமைப்பின் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துதல்" என்ற தலைப்பில் அரசியல் அமைப்பு கற்கை நிறுவனம் மற்றும் மாகாணசபை அதிகாரங்களை பெற்றுக் கொள்வதற்கான தேசிய அமைப்பு ஆகியன இணைந்து மாகாண ரீதியாக ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்கு நேற்று மட்டக்களப்பு கோப் - இன் விடுதியில் நடைபெற்றது.
கிழக்கு மாகாணத்திற்கான இக்கருத்தரங்கை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் . செல்வராசா, மாகாண அமைச்சர் விமலவீர திசாநாயக்க, மாகாண சபை உறுப்பினர்களான எம்.எஸ்.பரீட், எஸ்.புஸ்பராஜா, என்.வரதன் இகல்முனை மாநகர முதல்வர் மசூர் மெளலானா உட்பட உள்ளூராட்சி சபைத் தலைவர்கள், உறுப்பினர்கள், அரசசார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகள், கல்விமான்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்
"13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நீதிமயப்படுத்தலும் சிக்கல்களும்" என்ற தலைப்பில் பேராசிரியரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ஜயம்பதி விக்கிரமரத்தனவும் "13ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு தேவையான நிதியியல் காரணிகள் "என்ற தலைப்பில் முன்னாள் நிதிச்சேவை ஆணைக்குழுவின் தலைவர் அசோகா குணவர்தனவும் "மாகாணசபை மற்றும் அரச நிர்வாகம்" என்ற தலைப்பில் பேராசிரியர் நவரத்ன பண்டார மற்றும் "மாகாணசபை அதிகாரங்கள், காணி, அபிவிருத்தி" என்ற தலைப்பில் பேராசிரியர் ரஞ்சித் அமரசிங்க ஆகியோரும் இக்கருத்தரங்கில் கருத்துக்களை வழங்கினர்.
.jpg)
17 minute ago
28 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
28 minute ago
2 hours ago