2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

18ஆவது திருத்த சட்டம் தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டம்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 23 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜௌபர்கான், வதனகுமார்)

18ஆவது அரசியல் யாப்பு திருத்த சட்டம் தொடர்பான விழிப்புணர்வினை கிராம மட்டத்தில் ஏற்படுத்துவது தொடர்பான வேலைத்திட்டத்தினை கரிட்டாஸ் எகெட் மட்டக்களப்பு நிறுவகம் முன்னெடுத்து வருகின்றது.

இது தொடர்பாக கரிட்டாஸ் எகெட் நிறுவக ஊழியர்கள், கிராம மட்டத்தில் பணிபுரியும் தொண்டர்கள் மற்றும் சிறு உதவிக் குழுக்களை சேர்ந்த அங்கத்தவர்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் கருத்தரங்கு இன்று 09.30 மணிக்கு நிறுவகப் பணிப்பாளர் அருட்தந்தை. பேராசிரியர். த. ஸ்ரீதரன் சில்வெஸ்டர் தலைமையில் மட்டக்களப்பு சால்ஸ் மண்டபத்தில் இடம் பெற்றது.

இலங்கையின் அரசியல் யாப்புக்கள் பற்றியும், 18ஆவது அரசியல் யாப்பு திருத்த சட்டம் பற்றியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமாகிய க. துரைராஜசிங்கம் கருத்துரையாற்றினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .