2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

வாகன விபத்தில் 2 பெண்கள் உட்பட மூவர் படுகாயம்

Super User   / 2013 பெப்ரவரி 19 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.சுக்ரி


காத்தான்குடியில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.

காத்தான்குடி பிரதான வீதியில் அந் - நாசர் வித்தியாலயத்திற்கு முன்பாக முச்சக்கர வண்டியொன்று சிறிய லொறியொன்றுடன் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த இரண்டு பெண்கள் மற்றும் முச்சக்கர வண்டியின் சாரதி உட்பட மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இவர்கள் மூன்று பேரும் காத்தான்குடி ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் முச்சக்கர வண்டி முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--