Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 செப்டெம்பர் 06 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சிஹாரா லத்தீப்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசமான கொக்கட்டிச்சோலை, அம்பிலாந்துறை, கரடியனாறு பகுதியில் புதிதாக மின்னிணைப்பு கோருபவர்களுக்கு தாமதப்படுத்தாது விரைவாக மின்னிணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று செவ்வாய்க்கிழமை அமைச்சர் சம்பிக்க ரணவக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
புதிய மின்னிணைப்பு கோரி சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்னர் முழுமையான பணத்தை செலுத்தியும் இதுவரை மின்சார இணைப்பை வழங்க மட்டக்களப்பு மின்சார சபை அலுவலகம் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது நியாயமல்லவென பிரதியமைச்சர் முரளிதரன் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவிடம் முறையிட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஊடகப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
படுவான் கரை பிரதேசத்தில் சட்டவிரோத மின்சார பாவனைக்கு ஆயிரக்கணக்கில் அபராதம் விதிக்க ஆர்வம் காட்டும் மின்சார சபை, அந்தப் பகுதி மக்கள் மின்னிணைப்பு பெற முழுப்பணம் செலுத்தினால் தாமதமின்றி மின்னிணைப்பு வழங்கவும் ஆர்வம் காட்ட வேண்டும் என்று பிரதியமைச்சர் முரளிதரன் சம்பிக்க ரணவக்கவிடம் தெரிவித்துள்ளார்.
3 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago