Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 19 , மு.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆர்.அனுருத்தன், எல்.தேவ்)
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தில் தொழில் வாய்ப்பின்றி இருக்கின்ற இளைஞர் யுவதிகளுக்காக ஆரம்பித்துள்ள விசேட தொழிற் பயிற்சித் திட்டத்தின் கீழ் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இளைஞர்களுக்கு மூன்று மாத மின்இணைப்புப் பயிற்சி நெறி நேற்று ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வானது வெருகல் உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.பிரதீபன் தலைமையில் நடைபெற்றது. முதலமைச்சரின் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும் இப்பயிற்சி நெறியினை திருகோணமலை காந்தி சேவா அமைப்பு அமுலாக்கி வருகின்றது. மூன்று மாதகாலப் பயிற்சியினை முழுமையாக நிறைவு செய்து வெளியேறுகின்ற இளைஞர்களுக்கு பெறுமதியான சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.
இச் சான்றிதழ்கள் மூலம் வெளிநாட்டிலும் வேலை வாய்புக்களைப் பெறமுடியும். இந்நிகழ்விற்கு முதலமைச்சர் செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.கௌரிதரன், திருமலை காந்தி சேவா அமைப்பின் இயக்குணர் கு. நளினகாந்தன் மற்றும் முதலமைச்சர் செயலகத்தின் அதிகாரிகள், கிராம உத்தியோகஸ்த்தர்கள், இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
கிழக்கு மாகாணத்திலே வேலைவாய்ப்பின்றி மிகவும் வரிய நிலையில் இருக்கின்ற இளைஞர் யுவதிகளைத் தெரிவு செய்து ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தொழிற் பயிற்சியினை ஆரம்பித்து வருகின்றார். முதலமைச்சரது விசேட நிதி ஒதுக் கீட்டின் மூலம் மேற்படி பயிற்சி நெறி நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றது.
இதன் முதற்கட்டப் பணிகள் அண்மையில் திருகோணமலை குச்சவெளிப்பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள இளைஞர்களுக்கு சாரதிப் பயிற்சி நெறி ஆரம்பித்து வைக்கப்பட்டது. அடுத்து மட்டக்களப்பு மாவட்டத்திலே கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள இளைஞர்களுக்கு சாரதிப் பயிற்சி நெறி ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
24 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
1 hours ago
1 hours ago